/

சென்னையில் 19 கல்லூரிகளை கரோனா மையங்களாக மாற்ற நல்வாழ்வுத் துறை முடிவு

சென்னையில் கரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் கரோனா மையங்களாக  19 கல்லூரிகளை மாற்ற தமிழக நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:46 pm

DIN


சென்னை: சென்னையில் கரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் கரோனா மையங்களாக  19 கல்லூரிகளை மாற்ற தமிழக நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.  தற்போது சென்னையில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரமாக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 19 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. 

கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் சளி, காய்ச்சல் என கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை மட்டும் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் தமிழக நல்வாழ்வுத் துறை முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.