கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனியில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, கம்பம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 7 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2020, 1:15 pm

DIN

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, கம்பம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 7 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம், வடகரையில் ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரின் குடும்பத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண், 55 மற்றும் 17 வயதுடைய இரு பெண்கள் என மொத்தம் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில், பாரஸ்ட் சாலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண், சென்னையிலிருந்து வந்த தேனி அம்பேத்கர் வடக்குத் தெருவைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என மொத்தம் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து கம்பத்திற்கு வந்த  60 வயதுடைய தந்தை, 33 வயதுடைய மகன் என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.