
ஈரோட்டில் சந்தை மாற்றியமைக்கப்பட்டதைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரோனோ நோய்த் தொற்று பரவாமல் இருக்க காந்திஜி சாலையில் இயங்கி வந்த நேதாஜி காய்கறி சந்தை தற்போது ஈரோடு வ.உ.சி சி பூங்கா மைதானத்தில் மாற்றி அமைத்தனர். இந்த காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனைக்குக் கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. பழைய சந்தையில் பழம் செய்த வியாபாரிகளுக்கு வ.உ.சி பூங்கா மைதானத்தில் கடைகள் ஒதுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து இன்று 200க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாநகராட்சி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் விஜயகுமார் பழ வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் ஒதுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பழ வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.