மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு
மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் அரசு வழங்கி வருகிறது.
மேலும், பொருளாதார மீட்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு செல்வோரின் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசும் ஜூன் 30 வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளடேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...