
தேனி மாவட்டம் கம்பத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்களை ஜக்கையன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தார் சுமார், 1000 பேர்களுக்கு பொது முடக்க நிவாரணப் பொருள்களை கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். டி. கே .ஜக்கையன் வழங்கினார்.
அரிசி மற்றும் மளிகை சாமான்கள் நிவாரணப் பொருள்களாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் நகர ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. முககவசம் கிருமிநாசினி போன்றவற்றையும் ஜக்கையன் எம்எல்ஏ வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.