மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கு கரோனா

திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2020, 1:09 pm

DIN

திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் துணை ஆணையரின் கார் ஓட்டுநரான காவலர் ஒருவர், கடந்த இரு நாட்களாக சளி, இருமலுடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகத்தின்பேரில் அவரைக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில், அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று (ஜூன் 19) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துணை ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட காவலருடன் தொடர்பிலிருந்த நபர்கள் அனைவரையும் கரோனா பரிசோதனைக்கு மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம், திருச்சி மாநகர காவல்துறை வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.