கம்பத்தில் சாலை அமைக்க இடையூறு: மரங்களை மாற்று இடத்தில் நட்ட அதிகாரிகள்

தேனி மாவட்டம் கம்பத்தில் சாலை அமைக்க இடையூறாக இருந்த நான்கு மரங்களை, வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நகராட்சி அதிகாரிகள் நட்டனர்.
கம்பத்தில் சாலை அமைக்க இடையூறு: மரங்களை மாற்று இடத்தில் நட்ட அதிகாரிகள்

தேனி மாவட்டம் கம்பத்தில் சாலை அமைக்க இடையூறாக இருந்த நான்கு மரங்களை, வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நகராட்சி அதிகாரிகள் நட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 31ஆவது வார்டு ஏல விவசாய ஐக்கிய மேல்நிலைப்பள்ளி தெற்கு பகுதியில் ஊரக கட்டமைப்பு சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் 4 வேப்ப மரங்கள் இருந்தன. இதை ஆய்வு செய்த நகராட்சி பொறியாளர் செல்வராணி,   உதவிப் பொறியாளர் சரவணன் ஆகியோர் நான்கு மரங்களையும் அகற்றாமல் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட முடிவு செய்தனர்.

அதன்பேரில் நான்கு வேப்ப மரங்களையும் வேரோடு அகற்றி அருகே புதியதாக அமைக்கப்பட உள்ள 60 அடி அகலச் சாலையில் மையப் பகுதியில், ஏற்கனவே உள்ள புளியமரம் அருகே வரிசையாக நான்கு வேப்ப மரங்களையும் நட்டு வைத்தனர். 

மரங்கள் தழைக்க உரம் வைத்து, தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வருகின்றனர். நகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகளின் இந்த முயற்சியை இப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com