நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் புதிதாக 2,710 பேருக்கு தொற்று; பாதிப்பு 62 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 2,710 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2020, 2:18 pm

DIN


தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 2,710 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,710 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,487 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய அறிவிப்பில் 37 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.  

அதேசமயம், இன்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,112 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 55% ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,652 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 58.

இன்றைக்கு மட்டும் 26,592 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 9,19,204 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மற்ற மாநிலங்களை  ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இன்றைய தேதியில் 27,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.