பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கோவையில் தனியார் வீட்டு மனை விற்கும் நிறுவனத்தில் வட்டாட்சியர் ஆய்வு

கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம் இந்தியா எனும் தனியார் வீட்டு மனை விற்கும் நிறுவனத்தில் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image

கோவையில் தனியார் வீட்டு மனை விற்கும் நிறுவனத்தில் வட்டாட்சியர் ஆய்வு

Updated On :23 ஜூன் 2020, 9:29 am

கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம் இந்தியா எனும் தனியார் வீட்டு மனை விற்கும் நிறுவனத்தில் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சித்தாபுதூர் பகுதியில் உள்ள எம் இந்தியா எனும் தனியார் வீட்டு மனை விற்கும் நிறுவனத்தில் இன்று 200க்கும் மேற்பட்டவர்களை நேர்முகத் தேர்வு செய்வதற்காக அழைத்துள்ளனர். இவர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்துள்ளனர். 

கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் அவர்களுக்கு தகவல் வந்ததையடுத்து அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு எந்த விதமான விதிகளையும் அரசாங்கத்தின் எந்தவிதமான விதிகளையும் பின்பற்றும் சமூக இடைவெளி இன்றியும் இருந்தனர். 

இதையடுத்து அவர்களை அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, பின்னர் அவருடைய நிறுவனத்திற்கு சீல் வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.