தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பவானி நகரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

பவானி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
பவானி காவல் ஆய்வாளர் தேவேந்திரனிடம் மனு அளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்
Updated On :24 ஜூன் 2020, 9:41 am

DIN

பவானி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, பவானி காவல் துணை கண்காணிப்பாளர் சேகர், பவானி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோரிடம், கட்சியின் நகரச் செயலாளர் ப.மா.பாலமுருகன் தலைமையில் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:

பவானி நகரத்தில் உள்ள 27 வார்டுகளிலும் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானம் தனி நபர்களால் விற்கப்பட்டு வருகிறது. இதனால், குடிப்பழக்கம் அதிகமாகி வருகிறது. மேலும், சட்டவிரோதமாக விற்கப்படும் மதுவில் கலப்படம் இருப்பதாகப் பரவலாக புகார்கள் எழுந்துள்ளது.

இதன் காரணமாகவும், குடிப்பழக்கத்தின் காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, காவல் துறை நடவடிக்கை எடுத்து சட்டவிரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சந்திரசேகர், நகரத் துணை செயலாளர்கள் பி.ஆர்.செல்வராஜ், பி.ஆர்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.