சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரைத் தங்கவைத்து, கரோனா பரிசோதனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடி அருகே முத்தம்பட்டி தனியார் மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் திரும்பி வருவோரின் எண்ணிக்கையும், கரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. எனவே, வெளிமாநிலங்களிலிருந்தும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் வாழப்பாடி பகுதிக்கு வருவோரைக் கண்டறிந்து, சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்புவதற்கு வசதியாக, மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூரிலிருந்து வருவோருக்கு சளி மாதிரி எடுத்தபிறகு, பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்தித் தங்க வைப்பதற்காக, வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தல் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், தனியார் கல்லூரியை புதன்கிழமை பார்வையிட்டு, முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இன்று வியாழக்கிழமை முதல் இந்த மையத்தில், வெளியூரிலிருந்து வருவோரை, கரோனா பரிசோதனை முடிவு வரும்வரை தங்க வைக்கவும், தொற்று உறுதி எனத் தெரியவந்தால் சிகிச்சைக்காக சேலம் அல்லது ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், இல்லை என உறுதியான பிறகே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கவும் சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


