அடையாள அட்டையைக் காட்டினால் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதி: வடக்கு மண்டல ஐ.ஜி.

அடையாள அட்டையைக் காட்டினால் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் அறிவுறுத்தியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அடையாள அட்டையைக் காட்டினால் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தீவிர வாகனச் சோதனையில் ஈடுபடுமாறு தமிழக அரசு வலியுறுத்தியதன்பேரில், இதுவரை இல்லாத அளவுக்கு போலீஸார் கடுமையான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதிப்பது, இ-பாஸ் இல்லாமல் வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வது என கெடுபிடி காட்டி வருகின்றனர்.

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள்,செவிலியர்கள், அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் சில இடங்களில் பத்திரிகையாளர்களை கீழ்நிலை போலீஸார் அனுமதிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன. அடையாள அட்டையை காட்டினாலும் போலீஸார் இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், அடையாள அட்டையைக் காட்டினால் பத்திரிகையாளர்கள், பத்திரிகை சம்மந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவோரை அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் பத்திரிகை சம்மந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவோர் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை காட்டும்பட்சத்தில் அவர்களை வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தி வருகிறார். 

தமிழக அரசும் பொதுமுடக்க காலத்தில் செயல்படும் அத்தியாவசியப் பணிகளில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com