எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

செங்கல்பட்டில் மேலும் 197 பேருக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 4,399

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 197 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
கரோனா பரிசோதனை
Updated On :25 ஜூன் 2020, 6:06 am

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 197 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். சனிக்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 197 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,399-ஐ எட்டியுள்ளது. 

இந்தநிலையில், மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.