வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடல்

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜூன் 2020, 9:15 am

DIN

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தும் வணிகர் சங்க பேரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 4 மணி நேரம் மட்டும் மருந்துக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 

முன்னதாக, சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மரணத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.