அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் திராட்சைத் தோட்டம்!

அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள 2 ஏக்கர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் அமைக்கப்பட்டது.
அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் திராட்சை செடிகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் திராட்சை செடிகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
Published on
Updated on
1 min read

அந்தியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள 2 ஏக்கர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் அமைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் சுமார் 2 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இப்பகுதியில் இயற்கை முறையில் திராட்சைத் தோட்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஓசூரிலிருந்து 300 திராட்சை செடிகள் கொள்முதல் செய்யப்பட்டது.

காலியாக உள்ள நிலத்தில் திராட்சைத் தோட்டம் அமைக்க 300 குழிகள் தோண்டப்பட்டு, செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தலைமையில், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் திராட்சை செடிகளை நட்டனர். இயற்கை உரம், மண்புழு உரம், செம்மண் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு இயற்கை முறையில் திராட்சை செடி வளர்க்கப்படுகிறது.

இதுகுறித்து, அந்தியூர் செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி கூறுகையில், 

அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் காலியாக உள்ள இடத்தில் இயற்கை முறையில் திராட்சைத் தோட்டம் அமைக்க முடிவு செய்து இன்று 300 திராட்சை செடிகள் நட்டு வைக்கப்பட்டது. இயற்கை முறை பராமரிப்பின் மூலம் ஆண்டுக்கு மூன்று முறை திராட்சை அறுவடை செய்யலாம்.

காலியாக உள்ள இடங்களில் ஆடாதொடை, கரிசலாங்கண்ணி, துளசி, நிலவேம்பு உள்ளிட்ட மூலிகைச் செடிகளும் ஓரிரு நாளில் நடவு செய்யப்படும். மேலும், பேரூராட்சி அலுவலக கட்டடத்தின் மேல்பகுதியில் இயற்கை முறையில் தக்காளி, கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்டவை கொண்டு மாடி காய்கறித் தோட்டம் அமைக்கப்பட உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com