திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மானாமதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மானாமதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :29 ஜூன் 2020, 9:29 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மத்திய அரசு உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார், மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், காங்கிரஸ் நகர்த் தலைவர் எம்.கணேசன், முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.சி..சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி  வட்டார மற்றும் நகர்த்  தலைவர்கள் கரு.கணேசன், ஆரோக்கியதாஸ், செந்தில்குமார், மாரிமுத்து, கதிரேசன்,துரை நாகராஜ், மலைச்சாமி, நடராஜன் மற்றும்  மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.