எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கரோனா: சாத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்

தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர், ஆய்வக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளது. 

News image
சாத்தூரில் சீல் வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனை
Updated On :30 ஜூன் 2020, 12:57 pm

DIN

தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர், ஆய்வக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர்ப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவருக்கு தொடர் காய்ச்சல் இருந்தது வந்துள்ளது. இதையடுத்து சாத்தூரில் பிரதான சாலை உள்ள நகர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவருக்கு செய்த இரத்த பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இரண்டு செவிலியர்கள் மற்றும் இரத்த பரிசோதனை ஆய்வக உதவியாளர், மருத்துவமனை உதவியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பிவைத்து, வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்து மருத்துவமனையைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.