2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ரஜினிகாந்துடன் இஸ்லாமிய மதகுருக்கள் சந்திப்பு

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

News image
Updated On :1 மார்ச் 2020, 6:48 am

DIN

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில், அவரை சந்தித்து அதன் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நடிகா் ரஜினிகாந்தை சனிக்கிழமை சந்தித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவா் அபுபக்கா் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.