ரஜினி மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நீதிமன்றம் கேள்வி
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி சார்பில் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்க எடுக்கவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கினை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...