கோனியம்மன் கோயில் தேரோட்டம்: 10,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் வழங்கிய அத்தர் ஜமாத் பள்ளிவாசல்

​கோவை கோனியம்மன் கோயில் தோரோட்டைத்தை முன்னிட்டு அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பொதுமக்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. 
கோனியம்மன் கோயில் தேரோட்டம்: 10,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் வழங்கிய அத்தர் ஜமாத் பள்ளிவாசல்


கோவை கோனியம்மன் கோயில் தோரோட்டைத்தை முன்னிட்டு அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பொதுமக்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. 

கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோயில் மாசித் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தேரோட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. தேர்நிலையில் இருந்து புறப்பட்டுள்ள தேர், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பக்கவுண்டர் வீதி மற்றும் ராஜவீதி வழியாக மாலை 6 மணிக்கு நிலையை அடைவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதை முன்னிட்டு, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக 10,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com