மார்ச் 9-இல் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"திமுக தலைவர் - சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 09-03-2020 திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அதுபோது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 9-ஆம் தேதி முதல் 23 நாள்களுக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவைத் தலைவர் பி. தனபால் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...