மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்து முன்னணி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கோவை மாவட்டத்தில் கடையடைப்பு: காடேஸ்வரா சுப்பிரமணியம் 

இந்து முன்னணி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கோவை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தப்படும் என அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 மார்ச் 2020, 7:42 am

DIN

இந்து முன்னணி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கோவை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தப்படும் என அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பில், சி.ஏ.ஏ கொண்டு வரப்பட்டதற்கு பிரதமர், அமித்ஷா ஆகியோருக்கு பாராட்டு.  இந்தியாவில்  உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பில்லை.

இஸ்லாமியர்களை திமுக, கம்யூனிஸ்ட், தி.க போன்ற அமைப்பினர் தூண்டி விடுகின்றனர். இதை பயன்படுத்தி சமூகவிரொதிகள் கலவரத்தை தூண்ட முயல்கின்றனர். சி.ஏ.ஏ வை ஆதரித்து இந்து முன்னணி ஜெபவேள்வி நடத்தி இருக்கின்றனர். நேற்றிரவு இந்து முன்னணி  மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டு இருக்கின்றார்.

கலவரத்தை தூண்ட இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை கோவை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தப்படும். காவல் துறை இஸ்லாமியர்கள் பார்த்து பயப்படுகின்றது.

காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காலை 6 முதல் மாலை 6 வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் போராடுபவர்களை கைது செய்ய காவல் துறை முன் வருமா என தெரியவில்லை.

கோவையில் நடத்தப்படும் கடையடைப்பிற்கு வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம். மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கோவையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டு வரும் சி.ஏ.ஏ ஆதரவு போராட்டம் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.