காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைப்புப் பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ்
காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைப்புப் பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும் என தெற்கு ரயில்வே பொதுமேளாளர் ஜான் தாமஸ் கூறினார்.


காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைப்புப் பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும் என தெற்கு ரயில்வே பொதுமேளாளர் ஜான் தாமஸ் கூறினார்.
காரைக்கால் துறைமுகத்தில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்துக்காக, காரைக்கால் வந்த அவர் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில்வே வருமானத்தில் காரைக்கால் துறைமுகத்துக்கு அதிக பங்கு உண்டு. துறைமுகத்திலிருந்து நிலக்கரி ரயில் மூலம் அனுப்பிவைப்பதன் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.
எனவே இந்த பகுதியில் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக கூட்டத்துக்கு வந்துள்ளேன். தேவையான வசதிகள் செய்யப்படும். திருவாரூர் - காரைக்கால் வரையிலான ரயில்பாதை மின் மயமாக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. இந்த பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்துவிடும்.
காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைப்புப் பணிக்கான நிதி அனுமதி கிடைத்துவிட்டது. பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. பயணிகள் வசதிக்காக வந்துள்ள கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் என்றார் அவர். திருச்சி கோட்ட மேலாளர் அஜய் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வின்போது உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...