சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

7 எம்பிக்கள் மீதான சஸ்பெண்டை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :6 மார்ச் 2020, 4:39 am

DIN

7 எம்பிக்கள் மீதான சஸ்பெண்டை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் 7 போ் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மக்களவையில் அவைத் தலைவா் மேஜையில் இருந்த ஆவணங்களை பறித்துச் சென்றதை அடுத்து அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், 7 காங்கிரஸ் எம்பிக்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும். தில்லி வன்முறை பற்றி விவாதம் எழுப்ப முயன்ற 7 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. 

ஜனநாயகத்தின் ஆலயம் நாடாளுமன்றம் என கூறப்படுவதை பாஜக நினைவில் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.