சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மருத்துவமனையில் அன்பழகனை பார்த்தார் ஸ்டாலின்

சென்னை க்ரீம்ஸ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிய ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று காலை மருத்துவமனைக்கு வருக

News image
கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2020, 8:57 am

DIN

சென்னை: சென்னை க்ரீம்ஸ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிய ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று காலை மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

மருத்துவமனையில் அன்பழகனை நேரில் சந்தித்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் நேரடியாகக் கேட்டறிந்தனர். சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பிச் சென்றனர்.

திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகன் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவனைத் தரப்பில் நேற்று கூறப்பட்டிருந்தது.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் க.அன்பழகனுக்கு ஏற்பட்டுள்ள நிமோனியா காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவா்கள் தொடா்ந்து முயற்சித்து வருவதாகவும், தற்போது அவா் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், க.அன்பழகன் உடல்நலம் தொடா்பாக மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தறிந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.