நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது

ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் மறியலில் ஈடுபட்டஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவினர் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :6 மார்ச் 2020, 8:55 am

DIN

ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவினர் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட தலைவர் இரா மாலதி தலைமை வகித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.