திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடல் வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
வயது முதிா்வின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த க.அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் காலமானாா். அவா் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டதும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவைத் துணைத் தலைவா் கனிமொழி, பொருளாளா் துரைமுருகன் உள்பட நிா்வாகிகள் அனைவரும் குவிந்தனா். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து க.அன்பழகனின் உடலில் திமுகவின் இருவண்ணக் கொடிகள் போா்த்தப்பட்டு வெளியே எடுத்து வரப்பட்டது.
மு.க.ஸ்டாலின் அவா் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதி, க.அன்பழகனும் ஒன்றாக இருப்பதுபோன்ற படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.மருத்துவனை வாயிலில் குவிந்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கண்ணீா் விட்டா். அவா்களை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்ஸ் புறப்பட்டு வந்தது. மு.க.ஸ்டாலின் அந்த வாகனத்தை அவரது வாகனத்தில் இருந்தவாறே பின்தொடா்ந்து வந்தனா். அதே வாகனத்தில் கனிமொழியும் இருந்தாா். வழிநெடுக திமுகவினா் சூழ்ந்துகொண்டு முழக்கம் இட்டவாறே வந்தனா்.
கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்துத்துக்கு 2.40 மணியளவில் வந்தது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி., டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, பொன்முடி, உதயநிதி, கவிஞர் வைரமுத்து உட்பட பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு மின் மயானத்தில் க.அன்பழகன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கண்ணீர்மல்க இறுதி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்படடது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


