திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவுக்கு மக்களவைத்தலைவர் ஓ.பிர்லா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயது முதிா்வின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த க.அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில்
காலமானாா். .இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்களவைத் தலைவர் ஓ.பிர்லா தனது டிவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினரும் முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த நிர்வாகியும் தி.மு.க பொதுச்செயலருமான திரு க. அன்பழகன் அவர்களின் மறைவு குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மூத்த அரசியல்வாதியான பேராசிரியர் அன்பழகனின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அன்பழகன் ஆற்றிய பணிகளை மறக்க முடியாது. அவரின் மறைவு தமிழகத்திற்கும், திமுகவிற்கும் பேரிழப்பு” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


