ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான்.. அரசியல் கட்சி:  நடிகர் ரஜினி திட்டவட்டம்

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

News image
Updated On :12 மார்ச் 2020, 3:21 pm

DIN


சென்னை: தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரே ஆண்டு காலம் இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி அறிவிக்கவில்லை. இது ரஜினி ரசிகர்கள் மற்றும் அவரை ஆதரிப்பவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு மாறாக, தமிழகத்தில் பட்டிதொட்டி எல்லாம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும், தமிழக மக்கள் இடையே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டால்தான்  நான் அரசியல் கட்சித் தொடங்குவேன் என்றும், அரசியலில் மாற்றம் ஏற்படாது என்று தெரிந்தால், நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 2021ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவரின் வாரிசையும், தமிழகத்தை ஆளுபவர்களையும், முழு கஜானாவையும் வைத்திருப்பவர்களையும் நாம் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது ஏற்படாவிட்டால் எப்போதும் ஏற்படாது, நமது ஒரே முழக்கம் அசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்றும் ரஜினி கூறியுள்ளார். வெறுமனே வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.