பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது: தமிழக பாஜக தலைவர் முருகன் பேட்டி
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.


சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் எல்.முருகன், 'கோவையில் தீவிரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறை இதனை கண்காணித்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும்.
பாஜக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். அவர்களை நான் பின்தொடர்ந்து செயல்படுவேன். பாஜக குழு எடுக்கும் முடிவுகளின்படி செயல்படுவேன்.
பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது; அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
தமிழகத்தில் பாஜக வளர கட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணியாற்றுவோம். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பாஜக இடம்பெறும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...