/

சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:12 pm

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,கடந்த சில நாள்களாக விலை குறைந்து வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(மார்ச் 17) 22 கிராம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.73 குறைந்து, ரூ.3,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ரூ.39.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ1,800 குறைந்து ரூ.39,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,870

1 சவரன் தங்கம் ..................... 30,960

1 கிராம் வெள்ளி .................. 39.00

1 கிலோ வெள்ளி ................. 39,000

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,943

1 சவரன் தங்கம் ..................... 31,544

1 கிராம் வெள்ளி .................. 40.80

1 கிலோ வெள்ளி ................. 40,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.