எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி

ஆம்பூர் அருகே திருமணமாகி ஒரு நாளேயான காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2020, 7:54 am

DIN

ஆம்பூர் அருகே திருமணமாகி ஒரு நாளேயான காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (29), வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் திருமணமான முதல்நாளே காதல் ஜோடியான இருவரும் ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் பகுதியில் சென்னை - பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். 

சடலத்தை மீட்ட  ஜோலார்பேட்டை  ரயில்வே போலீஸார் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்யும் முன்பு இருவரும் தண்டவாளத்தில் படுத்து செல்ஃபி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.