ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் நீரில் மூழ்கி சாவு

ஆந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

News image
Updated On :20 மார்ச் 2020, 7:34 am

DIN

ஆந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தமிழ்நாட்டிலிருந்தும் இளைஞர்கள் பலர் இங்கு வந்து நீராடி, நீச்சல் அடித்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரதய்யபாளையத்திற்கு பொன்னேரி அருகில் உள்ள அருமந்த கிராமத்தை சேர்ந்த கெளதம் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் புறப்பட்டார். வழியில் மிட்டய்யபாளையம் அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றருகில் நின்ற நண்பர்கள் அங்கு நீச்சல் அடிக்க முடிவு செய்தனர். 

இந்நிலையில் நீச்சல் அடிக்க கிணற்றுக்குள் குத்தினர். அதில் கெளதம் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்யவேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

இச்சம்பவத்தின் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.