ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுகிறது

சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுவதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் அறித்துள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2020, 2:25 am

DIN

சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுவதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் அறித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை (22-ஆம் தேதி) ஒரு நாள் மட்டும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

முன்னதாக நேற்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதனிடையே தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகள் அனைத்தும் வரும் மாா்ச் 31 வரை மூடப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுவதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் இன்று அறித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.