சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பூர் காய்கறி மார்க்கெட் இடிக்கப்படுவதை கண்டித்து திமுக முன்னாள் மேயர் தலைமையில் அரை நிர்வாண போராட்டம்

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக, திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட திட்டமிடப்பட்டது.

News image
Updated On :21 மார்ச் 2020, 2:46 am

DIN

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக, திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக மார்க்கெட் வியாபாரிகளுக்கு தற்காலிக இடம் காட்டன் மார்க்கெட் பகுதியில் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மார்க்கெட் வியாபாரிகள் தற்காலிக இடத்துக்கு செல்லாமல் பழைய இடத்திலேயே காய்கறி மார்க்கெட் செயல்பட வேண்டும் என கோரினர். மேலும் காய்கறி மார்க்கெட் இடிக்க விடாமல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்த நிலையில், இன்று காலை திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர்கள் கண்ணன், சுப்பிரமணி தலைமையில் காய்கறி மார்க்கெட் இடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுடன் வந்தனர். 

Story image

அவர்களை தடுத்து திமுக முன்னாள் மேயர் செல்வராஜ் தலைமையில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் அரை நிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காய்கறி மார்க்கெட் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாண தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.