குமரி மாவட்டம் வெறிச்சோடியது
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.


மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் முக்கிய வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளான கோட்டாறு. வடசேரி தக்கலை மார்த்தாண்டம் களியக்காவிளை பகுதிகளில் உள்ள கடைகள் 100 சதவீதம் அடைக்கப்பட்டிருந்தன.
வடசேரி கிறிஸ் டோபர் பேருந்து நிலையம். மீனாட்சி புரம் அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் எந்த வாகனமும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் நகரின் அனைத்து சாலைகளும் துடைத்துவிட்டது போல் காட்சியளித்தது.
முக்கிய சாலை சந்திப்பு களில்காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...