தில்லி மாநாடு: வேலூரில் 27 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
தில்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று வந்தவர் உள்பட வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 27 பேர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.


தில்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று வந்தவர் உள்பட வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 27 பேர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களது குடும்பத்தினருன் அவரவர் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கப் படுவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்கள் நடந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், நூற்றுக்கும் மேற்பட்ட அயல்நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலிருந்து இந்த மாநாட்டுக்கு சென்று வந்த 17 பேரில் இதுவரை 10 பேர் கரோனா பாதிக்கப்பட்டிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்திலும் இந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 6 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இம்மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருவதை அடுத்து, தமிழகத்திலும் இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில் இருந்து ஒருவர் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரது குடும்பத்தினர் அவர்களது இல்லத்திலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தவிர, வெளிமாநிலங்களில் இருந்து மத பிரசாரத்துக்காக வந்துவிட்டு ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் 26 பேர் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பது தெரியவந்தது.
அவர்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) மணிவண்ணன் தெரிவித்தார்.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்திலும் 22 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 900 பேரில் 600 பேர் 28 நாட்கள் நிறைவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...