6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

20 துப்புரவு பணியாளர்களுக்கு நவீன கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :31 மார்ச் 2020, 7:10 am

DIN

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். நான்கு மண்டலத்துக்கு 5 பணியாளர்கள் வீதம் 20 துப்புரவு பணியாளர்களுக்கு நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே எஸ் தென்னரசு ஆகியோர் தங்கள் செலவில் தலா 65,000 வீதம் ரூ. 1லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 20 நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரங்களை வாங்கினர். இந்த இயந்திரங்களை துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 

எம்எல்ஏக்கள் கேவி ராமலிங்கம் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய இயந்திரங்களை பணியாளர்களுக்கு வழங்கினர்.  இந்த புதிய இயந்திரங்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மோட்டாருடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் 11 லிட்டர் கொள்ளளவு பிடிக்கும். ஒரே இடத்திலிருந்து பணியாளர் 5 மீட்டர் தூரத்திற்கு மருந்துகள் தெளிக்க முடியும்.  

அதேசமயம் தேவைக்கு ஏற்ப கூட்டவும் குறைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் இதை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில முதுகுகளிலும் மாற்றிக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் விஜயகுமார், பகுதி செயலாளர் கேசவமூர்த்தி கோவிந்தராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்எல்ஏக்கள் கேவி ராமலிங்கம் ,தென்னரசு ஆகியோர் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் பெரிய மார்க்கெட்டை பார்வையிட்டு  ஆய்வு செய்தனர்.

அங்கு வரும் மக்கள் இடைவெளி விட்டு செல்கின்றனரா?எ ன்று பார்வையிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.