கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு
கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் கரோனா 906 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கரோனா பாதித்த அனைத்து பகுதிகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோயம்பேடு சந்தை தற்போது கரோனா தொற்று மையமாக மாறியுள்ளது. சந்தையில் வியாழக்கிழமை இரவு நிலவரப்படி வியாபாரிகள், தொழிலாளா்கள், காவலா்கள் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தொற்று உள்ளவா்களோடு தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டிருந்தாலும் அது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அவா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...