கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பில் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கல்
கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பில் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பில் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தமிழகஅரசு ஆகியவை ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்த மனிதநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்-30 என்ற மாத்திரைகள் கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பாக சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள், அலுவளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க செயலாளர் ஜோ.வெங்கடசுந்தரம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்தரஷா முன்னிலை வகித்தார். ஹோமியோபதி மருத்துவர் ஆர்.பரணிதரன் அவர்களால் 52 மாத்திரைகள் உள்ள 500 பாட்டில்களை நகராட்சி ஆணையாளரிடம் வழங்கினார்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்-30 என்ற மாத்திரைகளை இந்த மாத்திரையை 10 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை வெறும் வயிற்றில் 6 மாத்திரைகளையும், 10 வயதுக்குள்ளான சிறுவர்கள் காலை வெறும் வயிற்றில் 4 மாத்திரைகள் வீதம் சுவைத்து சாப்பிட வேண்டும் என்றார் மருத்துவர் ஆர்.பரணிதரன்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பால்டேவிட், உதவிப் பொறியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரமேஷ், கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...