சங்ககிரியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேர் முகாமில் தனிமைப்படுத்தல்
கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் மூன்று இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை சோதனை சாவடிகள்


கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் மூன்று இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை சோதனை சாவடிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேருக்கு வழக்கத்தை விட காய்ச்சல் அதிகமாக காய்ச்சல் அறியும் கருவியில் காட்டியதால் அனைவரும் தனிமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனையடுத்து சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் புள்ளிப்பாளையம், சங்ககிரி பழைய பேருந்து நிலையம், குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகளை அமைக்கப்பட்டு அதில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள், காவல்துறை ஆகியோர்கள் கொண்ட குழுவினர் அந்த வழியாக செல்லும் லாரிகள், மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர்.
திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கிலிருந்து ரேஷன் பொருள்களை லாரியில் பாரம் ஏற்றி இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலைக்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேர் லாரியில் சென்றுள்ளனர். அவர்களை சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் உள்ள மருத்துவக்குழுவினர் காய்ச்சல் அறியும் கருவியில் பரிசோதனை செய்துள்ளனர். அதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேருக்கும் காய்ச்சல் வழக்கத்தைவிட அதிமாக இருந்துள்ளன.
அதனையடுத்து அவர்கள் அனைவரும் சங்ககிரியில் அரசு மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமிற்கு அனுப்பி வைத்து தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் மருத்துவர் சுந்தரம் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கரோனா மருத்துவ பரிசோதனைகளை செய்து பரிசோதனை முடிவுக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இப்பணிகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம் பார்வைட்டு ஆய்வு செய்தார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர். மூன்று சோதனை சாவடிகளிலும் திங்கள்கிழமை மாலை 3 மணி வரை 335 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 312 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...