அதில், அப்பள்ளியின் சுயநிதிப் பிரிவில் 45 ஆசிரியர்களும், 10 அலுவலக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கான ஊதியமாக 50 சதவீதம் மட்டுமே வழங்க முடியுமென நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், மாணவ-மாணவிகளிடமிருந்து 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணம் முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதனால், ஊரடங்கு இல்லாத நேரத்திலும் ஆசிரியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கஷ்டமான சூழலில் ஊதியக்குறைவு என்பதை மிகவும் வருத்தமான விஷயமாகும். எனவே, இதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து முழு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.