நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து; 7 பேர் காயம்
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6 ஆவது யூனிட்டில் மின் உற்பத்தியின்போது பாய்லர் திடீரென வெடித்தது. உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்டதையடுத்து, அனல் மின் நிலையம் முழுவதும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...