நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திமுக சார்பில் மதுக்கடை திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததை கண்டித்து வியாழக்கிழமை அவரவர் வீடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :7 மே 2020, 12:37 pm

DIN

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததை கண்டித்து வியாழக்கிழமை அவரவர் வீடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்திற்கு பிறகு வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மது பான கடை திறக்கும் முடிவினை கண்டித்து அவரவர் வீடுகளில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமை அறிவித்து இருந்தது. 

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி அவரவர் வீடுகளில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ-வும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கி.வேணு தலைமையில் அவரது வீட்டில் நடைபெற்ற கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி முன்னிலையில் திமுகவினர்  டாஸ்மாக் கடை திறப்பிற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு கொடி காட்டினர்.

கவரப்பேட்டை அடுத்த கோளூர் பகுதியில் திமு க தலைமைசெயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் அவரது வீட்டின் முன்னும், ஆரம்பாக்கத்தில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் தலைமையில் அவரது வீட்டின் முன்னும், மாநெல்லூரில் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் தலைமையில் அவரது வீட்டின் முன்னும் திமுகவினர் கருப்பு கொடி காட்டி டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.