மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-ஆவது பிரிவில் சீல் அகற்றம்
தில்லி தப்லிக் மாநாட்டிற்கு சென்றுவந்த மேட்டூர் அனல் மின்நிலைய பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து


தில்லி தப்லிக் மாநாட்டிற்கு சென்றுவந்த மேட்டூர் அனல் மின்நிலைய பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 06.04.2020 அன்று அவர் பணிபுரிந்து வந்த அனல்மின் நிலையத்தின் 2-ஆவது பிரிவில் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணியால் சீல் வைக்கப்பட்டது.
சிகிச்சை பெற்று வந்த பொறியாளர் குணமடைந்து வீடு திரும்பியதால் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று சீல் வைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையின் சீலை பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி அகற்றினார்.
கட்டுப்பாட்டு அறைக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் பணி துவங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...