ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரைவு மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தங்கமணி

வரைவு மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 மே 2020, 3:03 pm

DIN

வரைவு மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு 17.04.2020 அறிவிப்பின் வாயிலாக 2020 ஆம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மின்சார சட்டத்திருத்தத்திலுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய சரத்துக்களை நீக்க மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எடுத்த நடவடிக்கைக்கு பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வர் 23.12.2014 அன்று எழுதிய கடிதத்தில் அதனை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரைவு மின்சார சட்டத்திருத்தத்தில் கூறப்பட்ட முக்கிய சரத்துக்களான நடுத்தர மக்கள் பெறும் மானிய விலை மின்சாரம் மற்றும் விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கான மானியத்தை பயனீட்டாளர்களின் வங்கி கணக்கிற்கு அயதயத மாநில அரசு நேரடியாக செலுத்துதல் மற்றும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்த குழுவின் மூலமாக தேர்யதெடுத்தல் போன்ற மாநிலத்தின் உரிமைகளை இழக்க நேரிடும் வரைவு திருத்தங்களை கைவிடுமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் 12.11.2018 அன்று மாண்புமிகு பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்பொழுது, மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் மூலமாக, மேற்கூறிய முக்கிய சரத்துக்கள் மட்டுமல்லாது புதிய திருத்தமாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ள தனியார் துணை விநியோக உரிமம்தாரர் மற்றும் உரிமம் பெறுபவர் மூலமாக மேற்கொள்ளுதல் மற்றும் மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட மின்கொள்முதல், மின் விற்பனை செய்யும் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமம்தாரர்களுக்கு இடையேயான ஒப்பந்த சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றை மத்திய அரசினால் புதிதாக அமைக்கப்படவுள்ள மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்திற்கு மாற்றுதல் போன்ற சரத்துக்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து வரைவு திருத்தங்களும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமையதுள்ளதால் இந்த வரைவு மின்சார, சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வரால் எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மா தங்களது ஆட்சி காலத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை காக்கும் ஒரு நல்லரசாகவே ஆட்சி புரியது வயதார். அம்மாவின் வழியில் நடக்கும் தமிழக முதல்வர் எடப்பாடியாரின் அரசும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான எயதவொரு நடவடிக்கைகளையும் அனுமதிக்காது.
எனவே, தற்பொழுது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 2020 ஆம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தத்தினை கைவிட தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்கும்.
எந்த சூழ்நிலையிலும் தமிழக மக்களுக்கு பாதகமான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்ற அம்மாவின் கொள்கையினை கடைபிடிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மேற்கூறிய வரைவு மின்சார சட்டத்திருத்தம் அமலாக்கத்திற்கு வராதவண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.