அமைச்சருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி: அமமுக பிரமுகர் கைது
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவரது விராலிமலை தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு வீடு தோறும் தலா ஒரு மூட்டை அரிசி வழங்கி வருகிறார்.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவரது விராலிமலை தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு வீடு தோறும் தலா ஒரு மூட்டை அரிசி வழங்கி வருகிறார். இந்த அரிசி மூட்டையில் 'நாளைய முதல்வர்' எனக் குறிப்பிட்டதைப் போல சமூக ஊடகங்களில் படங்கள் வைரலாகின.
இந்த நிலையில் புதுக்கோட்டை நகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் குணசீலன் நகரக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், சித்தரிக்கப்பட்ட தவறான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் முத்துக்குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விழுப்புரம் சென்று திங்கள்கிழமை காலை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...