இதில் மே 12 செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் சுமார் ஒன்றரை வயதுள்ள பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் கயாரத் மோகன் தாஸ் அறிவுரையின் பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் கணேசன் தலைமையில் பாபநாசம் வனச்சரகர் கோ. பரத், முண்டந்துறை வனச்சரக அலுவலர் எம். சரவணகுமார், வனக்கால்நடை மருத்துவர் மனோகரன், ஆய்வாளர் அர்னால்டு, வனவர்கள் மோகன், ஜெகன் பயிற்சி வனச்சரக அலுவலர்கள் ராம்பிரகாஷ், ரவிபெருமாள், அஜய், தினேஷ், சம்பத் வனக்காப்பாளர்கள் தருணியா, அர்ஜுனன், வனக்காவலர்கள் செல்வம், சாந்தா, வேட்டைத் தடுப்பு காவலர் கார்த்தி மற்றும் வனக்கால்நடை மருத்துவக் குழு ஆகியோர் அடங்கிய தனிக் குழுவினர் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட கொடமாடி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.