இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட எனது கணவரின் உடலை உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், எனது கோரிக்கையை கடந்த மே 2-ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். எனது கோரிக்கையை நிராகரித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது கணவரின் உடலைத் தோண்டியெடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.