தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னையில் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2020, 10:39 am

DIN


சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 8,228-ஆக அதிகரித்துள்ளது. நாள் தோறும் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், திருநெல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் 23 கர்ப்பிணிகளுக்கும், எழும்பூர் தாய்சேய் நல அரசு மருத்துவமனையில் 34 கர்ப்பிணிகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராயபுரம் பகுதியில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 42 பேருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.